Singapore Airtel 3GL Phone – Screenplay of my video – Story ‘Del’

மே 12, 2008 senthilkumaran singapore writer

காட்டுமன்னார் கோயில் செந்தில்குமரன்

3 நிமிட திரைக்கதை ‘டெல்’

நிமிடம் – 00:00:00 ஆரம்பம்
காட்சி-1 – நெரிசலான வாகணக் கூட்டம்
பாத்திரங்கள் – டெல் (7 வயது சிறுவன்), அபி (இளம் வயது ரோபாட்டிக்ஸ் விஞ்ஞானி)

ஒளி வெள்ளம்,
சாலை ட்ராம்கள்,
சட்டென்று எல்லா வெளிச்சமும் மங்கி சவுண்டு மியூட் ஆகிறது
இரண்டு கண்கள் மட்டும் தெரிகிறது குலோசப்-பில், அதில் கிரிஸ்டல் புண்ணகை
செதுக்கிய இமைகள்
ஒரு மரத்தின் அடியில் ஒரு பூணை பயத்தோடு பதுங்குகிறது,
வாணளாவிய கட்டிடங்கள்
அதற்கு மேல் பறக்கும் இரண்டு ஹெலிகாப்டர்கள்
அந்த ஹெலிகாப்டர் மூக்கிலிருந்து ஹெட்லைட் வெளிச்சம், ‘அபி ரோபாட்டிக்ஸ் அண்டு சைபர்னாட்டிக்ஸ் லேப்ஸ்’ என்கிற போர்டு
க்ளோசப்-பில் தெரிகிறது.
சட்டென்று ஹெலிகாப்டர் சப்தம் விர்ரென்று கேட்கிறது

காட்சி-2 – டெல் எண்ட்ரி

அந்த ரோபாட்டிக்ஸ் ரிசர்ச் ஸ்டேஷன் வெளியே டெல் நிற்கிறான்
அது ஒரு ரோடு
அவன் மட்டும் தனியாக
அடுத்த ஷாட் – அவன் எண்ட்ரன்ஸ் கேட்டில் நிற்கிறான்
பூணை கண்கள்
முழங்காலும், முகமும் மட்டும் தெரிகிறது
அந்தி வாணத்தில் சூரியன் மறைய மிக தொலைவில் கீழ் வாணம் சிகப்பாய் தெரிகிறது
கால் சட்டையும், நீல நிற பணியனும் அணிந்திருக்கிறான்
மேலே ஒரு போர்வை
கரும் நீல நிறத்தில் மெட்டாலிக் ஷு
ஐ ப்ரோவில் வரிசையாக முடி கற்றைகள்
அகலமான நெத்தி
முழங்கை முழுவதும் போர்வை மறைத்து இருக்கிறது
வலது மனிக்கட்டில் ஒரு ப்ளேட் அளவில் (வாட்ச்) டைம் மெஷின்
ஒரு சின்ன திரை கம்ப்யூட்டர் அதில் இருக்கிறது
பச்சை ரேடியம் அதில் ஒளிர்கிறது
கழுத்தில் தொங்குகிறது ஒரு டேக்
அதில் பட்டையாக ஒரு பார்கோடு
டெல், மேலும் கீழும் பார்க்கிறான்
இவனை விட 10 மடங்கு உயரமாண கண்ணாடி கதவு அது
அந்த கதவில் இருக்கிறது ஒரு சென்ஸார்
யாரோ வெளியாட்கள் என்பதால் பச்சை லைட் மறைந்து ரெட் லைட் எரிகிறது
அதன் திரையில் இருந்து ‘யார் நீ’ என்கிற சின்த்ரான் குரல் ஒலிக்கிறது
உடனே டெல் தனது ஆட்க்காட்டி விரலை நீட்டுகிறான்
அப்போதும் சிகப்பு எரிந்து
‘உங்களுக்கு அணுமதி மறுக்கப்படுகிறது’ என்கிற சின்த்ரான் குரல் கேட்கிறது
தன் கால் சட்டை பைய்யிலிருந்து ப்யூஸ் போன்ற ஒரு பொருளை எடுத்து அந்த டிவைஸ் மீது வைத்து ‘பாஸ்வேர்டு’ (‘மறைசொல்’)
என்று டைப் பண்ணுகிறான்
அது உடனே ‘காத்திரு…’ என்கிறது
அடுத்ததாக ‘கிங் காங்’ என்று வருகிறது
உடனே ‘கிங் காங்’ என்று டைப் பண்ணுகிறான், கதவு திறக்கிறது

நிமிடம் – 00:01:00 ஆரம்பம்
காட்சி-3 அபி எண்ட்ரி
பாத்திரங்கள் – டெல்,அபி

விசாலமான உள் அறையில் சுவர் முழுவதும் கம்ப்யூட்டர் ஸ்கிரீன்
அபி மட்டும் அதன் எதிரில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான்
அந்த ஸ்கிரீன் முழுவதும் 4 இலக்க எண்கள் லட்ச கணக்கில் உள்ளன
யாரோ வரும் சப்தம் கேட்டு அபி சட்டென்று திரும்புகிறான்

டெல் அப்படியே அவனை பார்க்கிறான்

டெல் : நீ தான் அபியா!
அபி : (பதறிப்போய்…) யா..யார் நீ?
டெல் : வேளைக்கு விளம்பரம் பார்த்தேன் வந்தேன்
அ பி : சரி! எப்படி வந்தாய்?
டெல் : வெளியில் வைத்திருக்கிறாயே ஒரு பாடாவதி, அதை கேட்டு விட்டு தான் வந்தேன், அது 2020 மாடல், மாத்திடு
அபி : (கோபமாக…) யார் நீ?
டெல் : டெல், 2036 மாடல், புதிய தலைமுறையை சேர்ந்தவன், கடவுளுக்கு சமமானவன்
அபி : (முகவாயை சொரிந்து கொண்டே…)…அப்ப நீ வேற ஜாதி இல்ல!
டெல் :( முகத்தை மேலும் கீழுமாக ஆட்டுகிறான், உடனே சுவர் கம்ப்யூட்டர் திரையை கவனிக்கிறான்)..என்ன…ஜாக்பாட்டா…?
அபி : ஆமாம்! எனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது, நிறைய கடனாளி ஆகிவிட்டேன்
டெல் : (இப்போது காமிரா டெல் -ஐ சுற்றி வருகிறது)…’நீ அப்படி தான் ஆவாய், என்னை போன்ற ரோபோக்களால்
சிந்திக்க முடிகிறது, அட்டானமஸ் கம்ப்யூட்டர், என்னை போன்ற எத்தனையோ ரோபோக்கள் இப்போது சாப்ட்வேர் எஞ்சினியர்களாக
இருக்கின்றன, நீ பழசை வைத்துக்கொண்டு திண்டாடுகிறாய், ஒரு நாள் எல்லாமும் இஙகு திருடு போகும், நீ தெருவுக்கு வருவது நிச்சயம் அபி!’
அபி : (சிரித்துக்கொண்டே…) டெல், இந்த ஆராய்ச்சி சாலையைப் பற்றி உனக்கு தெரியாது!, இது என்னுடைய மூளை, மொத்த ரோபோ
அறிவு, நான் 4 PHD வாங்கியிருக்கிறேன், ஆனால் நீ வெத்து மெஷின்
டெல் : (தன் கால்சட்டையிலிருந்து ஏதோ ஒன்றை எடுக்கிறான்)
அபி : இது என்ன?
டெல் : நீயே பார்!
அபி : (வியப்போடு..) ஜீனர் டயோடு,
டெல் : உள்ளே வரும்போதெ எடுத்தது, இப்பவாவது புரியுதா?
அபி : (பேசமுடியாமல் வாயடைத்து போய் நிற்கிறான்)
டெல் : இங்கு எல்லாமும் தப்பு, உன் எலெக்ட்ரானிக்ஸ் தப்பு, நீ ஒரு உதவாக்கரை, உனக்கு எவன் டிகிரி தந்தான்

நிமிடம் – 00:02:00

அபி : (கோபமாக)சரி டெல், நீ இடத்தை காலிப்பண்ணு, இல்லை ரோபோ காப்பிடம் மாட்டுவாய், உனக்கு
வாழ்நாள் ஜெயில் உறுதி, அதிக பிரசங்கி
டெல் : அப்போது ஜாக்பாட்!
அபி : தினம் 100 டாலர் செலவழித்தால் நாண்கரை மாதங்களில் எனக்கு ஜாக்பாட் உறுதி, பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன் தெரியுமா உனக்கு,
டெல் : சரி, அபி, அது இப்போதே என்றால்?
அபி : டெல், நான் உன்னை போல் முட்டால் இயந்திரம் இல்லை, நான், உன்னை உருவாக்கிய ஆளிள் நானும் ஒருவன், எனக்கு ஜாக்பாட் மெஷினின் செக்யூரிட்டி தெரியும், வீணாக என் கோபத்தை தூண்டாமல் போ

டெல் : (அபியின் கைய்யை இழுக்கிறான், வெளியே ஓடுகிறார்கள், கண்ணாடி கதவுகள் தாணாக திறந்து வழி விடுகின்றன)

காட்சி-4 கிளைமாக்ஸ்
பாத்திரங்கள் – டெல்,அபி,போலிஸ் ஒருவர், டாக்டர் ஒருவர்

(பின்புறம் – சாலை, ஏடிஎம் மெஷின் அருகில் பெரிய அளவில் ஒரு ஜாக்பாட் மெஷின் உள்ளது, அபி தலை களைந்திருக்கிறது,டெல் அந்த ஜாக்பாட் மெஷினின் பச்சை திரையில் வேக வேகமாக தட்டுகிறான், அபி அவன் வேகத்தை பார்த்து பிரமிக்கிறான், அந்த ஜாக்பாட் மெஷினின் பச்சை திரையில் ‘ஹாய் டெல்!’ என்று வருகிறது, அதற்கு அடுத்த சில நொடிகளில் பச்சை திரையில் ‘அல்காரிதம் செக்’,'ஹுயூரிஸ்டிக்ஸ் செக்’,'அப்ளை’,'டிரான்ஸ்பர்’ , (டெல் சட்டென்று உன் ஐசி யை கொடு என்கிறான் – அபி தருகிறான்)

டெல் : பார்!
அபி : (நம்ப முடியாத ஜாக்பாட் டாலர்களை பார்த்ததும் அபி தனக்குள் ஏதேதோ பேசுகிறான், குழம்புகிறான்)
டெல், டெல், நீ என் செல்லம், நீ மேதை , இல்லை மாமேதை, உன்னை கடித்து, கொலை செய்து காக்காய்க்கு போட…டாய்..டாய்…டெல்..டெல்…(சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறான், தலையை களைத்துக்கொள்கிறான்)

டெல் தன் வாட்ச் போணில் எண்களை ஒத்துகிறான்,

உடனே பைத்தியக்கார ஆஸ்பத்திரி வேன் ஒன்றும், போலீஸ் வேனும் வருகிறது,

டாக்டர் : யாரப்பா இவரு?
டெல் : பய்த்தியம் போல் இருந்தது, பாவம்,அது தான் போண் பண்ணேன்

போலிஸ் : குட் ஜாப், கீப் இட் அப்!

(அந்த லொகேஷனிலிருந்து காமிரா லாங் ஷாட்டுக்கு வந்து குளோசப் பில் ‘டெல் ரோபாட்டிக்ஸ் அண்டு சைபர்நாட்டிக்ஸ் லேப்ஸ்’
என்று இருக்கிறது, அதன் மேல் ‘தி எண்டு’ என்ற வாசகம் விழுகிறது)

நிமிடம் 00:03:00 end

Entry Filed under: Uncategorized

Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

atchaya paathiram

kavidhaikal

thamizh nenje

மே 2008
தி செ பு வி வெ ஞா
     
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தொகுப்புகள்

Blogroll

தற்போது

பதிவுகள்

Haasya kadhai சிறுகதை

வகைகள்

அண்மைய மறுமொழிகள்

senthilkumaran singa… மேல் Short Story – Ettambu (8…
senthilkumaran singa… மேல் About
Watch videos at Vodpod and other videos from this collection.

வகை மேகம்

Uncategorized

Blog Stats

Top Clicks

Top Posts

Flickr Photos

27/365 : Escape

Okinawa Churaumi Aquarium

let the wind blows

More Photos